நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு FD திட்டத்தை வழங்குகிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் வங்கி 300 மற்றும் 400 நாட்களுக்கான பிக்சர் டெபாசிட் முதலீடு திட்டங்களை வழங்குகின்றது.

இது குறித்து வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், 2024 ஜூன் 30-ஆம் தேதி முதல் Ind Super 400 Days மற்றும் Ind Supreme 300 Days FD திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்த சிறப்பு FD என்பது காலபிள் FD ஆகும். Callable FD என்பது இதில் நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே பணம் எடுக்கலாம் என்பதாகும்.