தாய்லாந்து நாடு இந்தியர்களுக்கு வழங்கியிருந்த விசா இல்லா பயணத்தை நீட்டித்துள்ளது. கடந்த நவம்பர் 10-ம் தேதி தொடங்கிய இந்த திட்டம் மே மாதம் 10-ம் தேதியுடன் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்தியர்களின் பயண எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியர்கள் விசா இல்லாமல் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கலாம். மேலும், விருப்பப்பட்டால், கூடுதலாக 30 நாட்கள் தங்கவும் வழி இருக்கிறது. இதோடு நின்றுவிடாமல், தாய்லாந்து புதிய விசா வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைதூர வேலை செய்பவர்கள், டிஜிட்டல் நாடோடிகள் போன்றோருக்கு ‘டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா’வும், மாணவர்களுக்கு ‘ஸ்டுடெண்ட் விசாவும்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.