நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவில் வீழ்த்தி இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு 2-வது உலக கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் இந்த போட்டியுடன் விடை பெற்றுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். அவருடைய பயிற்சி காலம் இந்த உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வந்தது.

அவருடைய தலைமையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது. இருப்பினும் தற்போது டி20 உலக கோப்பையில் 17 வருடங்களுக்குப் பிறகு இந்தியா உலக கோப்பையை வென்றுவிட்டது. இதனால் உலக கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையுடன் ராகுல் டிராவிட் தன்னுடைய பணியை சிறப்பாக நிறைவு செய்துள்ளார். மேலும் அடுத்த தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.