இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர் நவீன் சாவ்லா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தேர்தல் ஆணையராக பணிபுரிந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தேர்தல் முறையை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இவருக்கு தற்போது 79 வயது ஆகும் நிலையில் உடல்நல குறைவின் காரணமாக இன்று காலை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். இந்த தகவலை மற்றொரு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான எஸ் ஒய் குரைஷி என்பவர் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.