ஆஸ்திரேலியாவுக்கு வருகிற நவம்பர் மாதம் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 5 தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி நவம்பர் 22ஆம் தேதி பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்திய அணி கடந்த 2018/19 ஆம் ஆண்டில் விராட் கோலி தலைமையில் விளையாடிய போது ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றி பெற்றது. அதேபோன்று கடந்த 2020/21 ஆம் ஆண்டும்  பார்டர் கவாஸ்கர் ட்ராபியை இந்தியா வென்றது. இதனால் ஆஸ்திரேலியாவில் வைத்து சொந்த மண்ணிலேயே அந்த அணியை வீழ்த்தி 3-வது முறையாக இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் நிலவுகிறது. இதற்கிடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல் ஆகிய போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றது.

அப்படி இருந்தும் சொந்த மண்ணில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா 2 முறை தோல்வியை தழுவியது. இதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க இந்த முறை ஆஸ்திரேலியா முழு பேச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணியின் வீரரான மார்னஸ் லாபுக்சானே இந்திய அணிக்கு சவால் விட்டுள்ளார். அதாவது இந்தியா சமீப காலமாக வேகப்பந்து வீச்சில் முன்னேற்றத்தை கண்டு வருகிறது எனவும் அதனால்தான் சொந்த மண்ணில் கூட இந்தியாவை வீழ்த்துவது கடினமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில் இந்த முறை பலமான வேகப்பந்துவீச்சை ஆஸ்திரேலிய அணி சமாளித்து அவர்களின் ஹாட்ரிக் வெற்றி கனவை உடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் நிச்சயம் அவர்களை வீழ்த்துவோம் என்று நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.