
இந்தியாவில் எஃகு உற்பத்தி குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எஃகு மற்றும் கிராமப்புற மேம்பாட்டு இணை அமைச்சர் பக்கன் சிங் குலேஸ்தே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் இந்தியாவில் எஃகு உற்பத்தி வருடம் தோறும் அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் எஃகு உற்பத்தியை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு மற்றும் எஃகு பொருட்களுக்கு கொள்கையை அமல்படுத்தியது, சிறப்பு எஃகுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் போன்றவைகள் அடங்கும். உள்நாட்டில் எஃகு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ரூ. 6322 கோடி செலவில் எஃகுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 வருடங்களில் இந்தியாவின் எஃகு உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2021-22 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு எஃகு உற்பத்தியானது 120.29 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.