
பேப்பர்ஸ் இந்தியாவின் மூலமாக இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது, அதன்படி படம் ஒன்றுக்கு 300 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகராக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சம்பள பட்டியலின் முதல் இடத்தில் இருக்கிறார். அதன்படி இவர் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இரண்டாவது இடத்தில் நடிகர் விஜய் 130 கோடி முதல் 275 கோடி சம்பளம் வாங்குகிறார். மூன்றாவது இடத்தில் நடிகர் ஷாருக்கான் 150 கோடி முதல் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
நான்காவது இடத்தில் இருக்கும் ரஜினிகாந்த் 125 கோடி முதல் 220 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் .ஐந்தாவது இடத்தில் இருக்கும் அமீர் கான் 100 கோடி முதல் 275 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆறாவது இடத்தில் இருக்கும் பிரபாஸ் நூறு கோடி முதல் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஏழாவது இடத்தில் இருக்கும் அஜித் 150 முதல் 165 கோடி சம்பளம் வாங்குகிறார். ஒன்பதாவது இடத்தில் இருக்கும் சல்மான் கான் மற்றும் கமலஹாசன் 100 கோடி முதல் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்.