
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் கவுன்சில் என்று அழைக்கப்படும் NAAC தன்னாட்சி அமைப்பு ஆய்வு செய்து தரச் சான்றிதழை வழங்கி வருகின்றது. இதன் மூலமாக மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலத்திற்கு மேற்படிப்புக்கு செல்லும்போது இதற்கு முன்பு பயின்ற கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தது என எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த நிலையில் NAAC இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் A+, A++ஆகிய கிரேட் அடிப்படையில் இனி தரவரிசை படுத்தப்படாது என்ற திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதாவது இனி அங்கீகாரம் பெற்றவை மற்றும் அங்கீகாரம் பெறாதவை என்று மட்டுமே வகைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.