
பிரபல நடிகர் ரஞ்சித் குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கியுள்ள நிலையில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் பிரவீன் காந்தி மற்றும் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய பிரவீன் காந்தி வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் போன்றவர்களால் தமிழ் சினிமா வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், சினிமாவில் சாதியை பற்றி பேசுபவர்களை ஒதுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு தற்போது வெற்றிமாறன் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது நேற்று பாளையங்கோட்டையில் உயிர் தமிழுக்கு படத்தை பார்ப்பதற்காக சென்ற வெற்றிமாறன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு, சமூக பாகுபாடு இல்லை என்று கூறுபவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தியா முழுவதும் ஜாதிய பாகுபாடுகள் இருக்கிறது. இது தமிழகத்திலும் இருக்கிறது. மேலும் அதற்கு பல்வேறு சம்பவங்கள் தன் கண்முன்னே உதாரணமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.