
இந்தியாவின் முன்னோடி நிறுவனமான அவதார் குழுமம் (DEI) இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் சமூக மற்றும் தொழில்துறை, பெண்களுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குதல் போன்றவைகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் நாட்டில் பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரமாக சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு டாப் 10 லிஸ்டில் 9-வது இடத்தில் கோயம்புத்தூரும், 10-வது இடத்தில் மதுரையும் இருக்கிறது. அதன் பிறகு 10 லட்சத்துக்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட சிறந்த இந்திய நகரங்களில் திருச்சி முதல் இடத்தையும், வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கிறது. மேலும் டிஇஐ என்ற நிறுவனத்தால் 111 இந்திய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழ்நாட்டில் 8 நகரங்கள் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.