இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் தடுக்கப்படுவது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்தியாவில் சிறிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் தான் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் தடுக்கப்படுகிறதாம்‌. சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் புவி தட்டுகளின் அழுத்தத்தை விடுவிக்க உதவுகிறது. பேரழிவில் இருந்து இந்தியாவை காக்க உதவுகிறது. இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் அவற்றை சமாளிப்பதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனைத்துக்கும் தயாராக இருப்பதாகவும் ‌ கூறியுள்ளனர்.

இது பற்றி நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் ஓபி மிஷ்ரா கூறும் போது, பாகிஸ்தானின் எல்லைக்கு அருகே இந்தியாவின் மேற்கு பகுதியில் முச்சந்திப்பு உள்ளது. இது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் மூலம் தொடர்ந்து அழுத்தத்தை வெளியிடுகிறது. இந்த முச்சந்திப்பு அதிக இறுக்கமானது மற்றும் கச்சிதமானது என்பதால் அதிக அளவு அழுத்தத்தை தாங்க கூடியது. இந்த அழுத்தம் உடையும்போது கண்டிப்பாக பாதிப்புகள் பெரிய அளவில் இருக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.