இந்த உலகில் மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் மரங்களும் அவசியம்தான். மரங்கள் இருந்தால் மட்டுமே இயற்கையான காற்றை நாம் சுவாசிக்க முடியும். மனித வாழ்வில் மரங்கள் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மரங்கள் அழிக்கப்படுகின்றன.

அதன்படி இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் விளைநிலங்களில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் அதிகப்படியான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. மொத்த நிலப்பரப்பில் காடுகள் 20 சதவீதம், விளைநிலங்கள் 56 சதவீதமாக இருக்கும் நிலையில் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டில் எடுத்த செயற்கைக்கோள் படங்களுடன் ஒப்பிடும்போது 11% மரங்கள் அழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.