
உலகின் பல நாடுகளில் தற்போது குரங்கம்மை தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிறப்பித்தது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அந்த வாலிபருக்கு தற்போது குரங்கமை தொற்று உறுதியாகிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அந்த வாலிபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் குரங்கும்மை பரவல் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.