மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதனை தடுக்க எதுவானும் பெரிய நடவடிக்கையை எடுக்க தயங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், “இந்தியா இதுவரை எந்த நாட்டையும் வெறுப்புணர்வுடன் தாக்கியதில்லை. ஆனாலும், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதற்கு தக்கபடி பதிலடி கொடுக்கிறோம்” என்று கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை சமாளிக்கும் போது, ராணுவ நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என அவர் வலியுறுத்தினார். நாட்டின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் பாதுகாக்கும் பணியில், எந்த விதத் தளர்ச்சியையும் இந்தியா காட்டமாட்டாது என ராஜ்நாத் சிங் கூறினார்.