சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் எனப்படும் பயங்கரவாத தாக்குதல் சற்று அதிகம். அந்த மாநிலத்தில் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள டைம்னர் என்ற கிராமம் நக்சலைட்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த கிராமத்தில் மொத்தம் 53 வீடுகள் இருக்கும் நிலையில் பல வருடங்களாக நக்சலைட்டுகள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இந்த கிராமத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்து 77 வருடங்களாக மின்சாரம் இல்லை. அந்த கிராமத்திற்கு மின்சாரம் வழங்க எவ்வளவு அரசு முயற்சித்த போதிலும் அதனை நக்சலைட்டுகள் தடுத்தனர்.

தற்போது நக்சலைட் ஒழிப்பு திட்டம் என்பது துரிதப்படுத்த பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தற்போது நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டைம்னர் கிராமத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 77 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக இந்த கிராம மக்கள் தற்போது மின்சார வசதியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்