
கனடாவில் ஹர்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ குற்றம் சாட்டியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கனடா முடிவு செய்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையே இந்தியா தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. டெல்லியில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகள் ஆறு பேரை வெளியேற்றவும் உத்தரவிட்டது. இதே போல கனடா அரசும் கனடாவில் இருக்கும் இந்திய அதிகாரிகள் ஆறு பேரை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருக்கிறது.
இப்போது வந்த தகவலின் படி கனடா இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும். கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது கொலையில் இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியுள்ளது. அதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசாங்கம் விசாரணையின் போது கனடாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜெக்மீத் சிங் கூறியதாவது, ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு தடை விதிப்பதோடு, இந்திய டு தூதரக அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.