நடப்பு டி20 உலக கோப்பையில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத இருக்கிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ‌ முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க அணியுடன் மோத இருக்கிறது. முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வெல்லும் நோக்கத்தில் விளையாடும் நிலையில் 2-வது உலக கோப்பையை நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணியும் சிறப்பாக விளையாடும் என்பதால் நாளை நடைபெறும் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இரு அணிகளின் பலம்  மற்றும் பலவீனம் குறித்து பார்ப்போம். அதன்படி தென்னாப்பிரிக்க அணியின் பலமே பந்துவீச்சு தான். அந்த அணியில் ரபாடா, நோர்ஜே, மார்க்கோ ஜான்சன் போன்ற தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் சுழற் பந்துவீச்சில் ஷாம்சி அணிக்கு வலுசேர்க்கிறார். இருப்பினும் பேட்டிங் வரிசையில் டி காக் மட்டுமே அணிக்கு வலு சேர்க்கும் விதமாக இருக்கிறார். இதனால் பேட்டிங்கில் அந்த அணி பலவீனமாகவே இருக்கிறது என்று கூறலாம். அதன் பிறகு இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் விராட் கோலி ஃபார்மில் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த முறை ரோகித் சர்மா சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். இதேபோன்று ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சிவம் துபே ஆகியோரும் பேட்டிங் வரிசையில் சுமாராகவே செயல்படுகிறார்கள். இதனால் அவர்கள் அனைவரும் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடினால்தான் அணி வலுபெறும். அதன் பிறகு பந்துவீச்சை பொறுத்த வரையில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகப்பந்து  வீச்சில் சிறப்பாக இருக்கும் நிலையில் சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக இருக்கிறார்கள். மேலும் இதில் ஆல் ரவுண்டர்களாக  ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இருக்கும் நிலையில் நடப்பு தொடரில் ஜடேஜா என்னும் முழுமையாக 4 ஓவர்கள் கூட பந்து வீசாத நிலையில் அக்சர் படேலும் ஆல் ரவுண்டர் என்பதால் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.