
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார். அதன்பின் டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இதற்கு முன்னதாக தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற நிலையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் யார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் ஒரு பேட்டியின் போது கேட்கப்பட்டது. அதற்கு அவர் தோனியை போன்று ரோஹித் சர்மாவும் தலைசிறந்த கேப்டன் என்று கூறினார். அதன் பிறகு தோனிக்கு நிகராக ரோகித் சர்மாவும் விளையாடி வருவதாக கூறிய அவர் இதற்கு மேல் ரோஹித் சர்மாவை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் இருவருமே சமமானவர்கள் என்றும் தலை சிறந்த கேப்டன்கள் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.