இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சிளாக ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்துவிட்டது. இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. இந்த போட்டி நிறைவடைந்தவுடன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தற்போது பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ரோகித் ஷர்மாவும், விராட் கோலியும் அற்புதமான ஆட்டக்காரர்கள். அவர்களுடைய இடத்தை உடனே நிரப்புவது மிகவும் கடினம். அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படும். இருப்பினும் அவர்களுக்கு பதில் திறமையான இளம் வீரர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன். கம்பீர் நிறைய அனுபவம் மிக்கவர். அவர் 3 விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும் அவர் தலைமை பயிற்சியாளராக வந்தால் இந்திய அணிக்கு அது மிகவும் நல்லது. அவருடைய அனுபவம் இந்தியாவுக்கு நிச்சயம் தேவை என்று கூறினார்.