
இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அசாத்திய பவுலிங் மூலமாக நேற்று நியூசிலாந்தை தோற்கடித்தார். இவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கு காரணமாக இருந்தார். இவர் ஆரம்ப கட்டத்தில் சுழல் பந்துவீச்சாளராக விரும்பவில்லை என்பது பலரும் அறியாத ஒரு விஷயம். ஐபிஎல் தொடரில் இவர் 2020 சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். அந்த தொடரில் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் இவர் தான். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இவர் 20 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக விளையாடியதால் ஆஸி., சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் காயம் காரணமாக பங்கேற்க முடியவில்லை இதனை எடுத்து 2021 டி20 உலக கோப்பையில் இந்தியாவில் வருணுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சரியாக செயல்படாததால் அணியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனிடையே சமீபத்தில் நடந்த தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதால் 2025 சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு வந்தது. 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து பேட்டிங் வரிசையை சரித்தார்.
இப்போது டி20 கிரிக்கெட் தாண்டி ஒருநாள் கிரிக்கெட்டிலும் வலுவான இருப்பை பதித்துள்ளார். கிரிக்கெட் விளையாடி வரும் சக்கரவர்த்தி தினேஷ் கார்த்திக் போல விக்கெட் கீப்பராக விரும்பியுள்ளார். ஆனால் வேகப்பந்து வீச்சாளராக மாறினார் . ஆனால் எதிர்பாராத உடல் பிரச்சினையால் அவரால் வேகப்பந்து வீச முடியாமல் போக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தியுள்ளார். அதன்பிறகு 27 வயதில் டென்னிஸ் பந்தில் விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு சுழற் பந்து வீச்சு பக்கம் கவனம் செலுத்தி கொல்கத்தா அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.
இதெல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இவர் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. ஆர்கிடெக்ட் படித்துவிட்டு தனியாக அலுவலகம் போட்டு வேலை பார்த்த இவருடைய அலுவலகம் வெள்ளத்தில் அடித்து செல்ல என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். அப்போதுதான் சினிமா பக்கம் போயுள்ளார். அப்படி 2014 வருடம் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த கிரிக்கெட் விளையாட்டு மையப்படுத்தி “ஜீவா” என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு இரண்டு வருடத்திற்கு மேலாக சினிமா துறையில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவோடு கதை எழுதுவது போன்ற பணிகளை செய்து வந்தவர் மீண்டும் கிரிக்கெட் பக்கம் திரும்ப தினேஷ் கார்த்திக்கின் கண்ணில் பட்டு இன்று வரை இந்திய அணிக்காக பட்டையை கிளப்பி வருகிறார்.