இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் வருகிற 27ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு குழு மீது பல்வேறு மிதமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக ருதுராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் டி20 அணியில் இடம்பெறாதது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இலங்கைக்கு எதிராக நடைபெறும் டி20 போட்டியில் இடம்பெறாத வீரர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் என்பது எனக்கு நன்றாக புரிகிறது. இருப்பினும் எங்களால் 15 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். அதன்பிறகு டி20 உலக கோப்பைக்கு முந்தைய போட்டிகளில் ரிங்கு சிங் நன்றாக விளையாடிய போதிலும் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அபிஷேக் ஷர்மா மற்றும் ருது ராஜ் ஆகியோர் அணியில் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு அஜித் அகர்கர் இந்த பதிலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.