சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் இருவரும் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று அறிவித்தனர். குறிப்பாக 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அவர்கள் இருவரும் விளையாடுவார்கள் என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் என்னும் எத்தனை வருடங்கள் விளையாடுவார்கள் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ரோகித் சர்மா இன்னும் இரு வருடங்கள் மட்டுமே விளையாட வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு விராட் கோலி தன்னுடைய ஃபிட்னஸ் காரணமாக 5 வருடங்கள் வரை விளையாடுவார். மேலும் அவர்கள் இருவரும் சிறப்பான வீரர்களாக இருப்பதால் அவர்கள் விரும்பும் வரை விளையாடலாம். அதன் பிறகு விருப்பப்பட்டால் ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.