
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது 3-வது முறையாக அவர் விண்வெளி வீரர் புட்ச் வில் மோருடன் சேர்ந்து விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தங்கி அவர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருக்கிறார். அவர் விண்வெளி மையத்தில் காற்றில் மிதந்தவாறு நடனமாடிய வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது நாசா கூறிய ஒரு தகவல் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்லும் போது தன் னுடன் இந்தியர்களின் பிரியமான உணவாக கருதப்படும் மீன் குழம்பை உடன் எடுத்துச் சென்றதாக கூறியுள்ளனர்.
இதன் மூலம் அவருக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுமாம். அதே நேரத்தில் அவருக்கு விருப்பமான சமோசாவை எடுத்துச் செல்லவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்வதற்கு முன்பாக அளித்த பேட்டியில் நான் விநாயகர் சிலையை என்னுடன் எடுத்து செல்வேன். அது எனக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று கூறியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் விண்வெளிக்கு சென்ற போது பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் சமோசா ஆகியவற்றை உடன் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மீன் குழம்பு மற்றும் விநாயகர் சிலை போன்றவற்றை உடன் எடுத்துச் சென்றது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.