
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்பன் கில் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டார். இவர் பிரபல டிவி நடிகையான ரிதிமா பண்டிட் என்பவரை காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியானது. இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதமே திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை ரிதிமா பண்டிட் திருமணம் குறித்த தகவல்களுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இது சிலரின் கற்பனை என்றே நினைக்கிறேன்.
எனக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த தகவலில் உண்மை இல்லை என்று சொல்லி நான் சலித்து போய்விட்டேன். அதனால்தான் தற்போது சமூக வலைதளம் மூலம் விளக்கம் அளிக்க முடிவு செய்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில் சுப்மன் கில் பற்றி எதுவுமே ரியாது. இது மிகவும் ஆபத்தானது. இப்படிப்பட்ட செய்திகள் எப்படி பிரபலம் ஆகிறது என்பது புரியவில்லை. மேலும் இப்படி எந்த ஒரு சம்பவங்களும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.