இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற 27ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 3 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு குழுவுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் இந்திய அணியினர் தேர்வு செய்தது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அப்போது அவரிடம் ஹர்திக் பாண்டியா எதற்காக டி20 போட்டியில் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்டியா எப்பொழுதும் எங்களுக்கு ஒரு முக்கியமான வீரர். இருப்பினும் அவர் முழுமையான பிட்னஸை கொண்டிருக்கவில்லை. அதனால்தான் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு ஹர்திக் பாண்டியாவின் பிட்னஸ் மிகப்பெரிய சவாலாக இருப்பதால் அவரை தேர்வு செய்வது எங்களுக்கு கடினமாக இருக்கிறது. ஏனெனில் நாங்கள் அதிக அளவில் காயம் இன்றி விளையாடக்கூடிய ஒருவரை தான் விரும்புகிறோம். அப்படி பார்க்கும்போது சூரியகுமார் அதற்கு தகுதியானவராக இருப்பார். அதேசமயம் நாங்கள் ஹர்திக் பாண்டியாவையும் சிறப்பான முறையில் கையாள்வோம். மேலும் கேப்டன் பொறுப்பு தொடர்பாக ஹர்திக் பாண்டியாவிடவும் பேசியுள்ளோம் என்று கூறியுள்ளார்.