
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் தற்போது செல்பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படம் பிப்ரவரி 24-ம் வெளியாக இருக்கும் நிலையில் டிரைலர் வீடியோவில் அக்ஷய்குமார் இந்திய வரைபடத்தின் மீது நடப்பது போன்று இருப்பதால் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதாவது தன்னுடைய வட அமெரிக்க சுற்றுப்பயணத்தை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர் அக்ஷய் குமார் ஒரு வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் இந்திய வரைபடத்தின் மீது அக்ஷய் குமார் நடப்பது போன்று இருப்பதால் இந்திய வரைபடத்தை அவர் அவமதித்துவிட்டாதாக கூறி பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வீடியோவில் திஷா பதானி, நேரா பதேகி, மௌனி ராய், சோன பாஜ்வா ஆகியோரின் இடம்பெற்ற நிலையில் அவர்கள் மற்ற நாடுகளின் வரைபடத்தில் மிதிக்க அக்ஷய் குமார் மற்றும் இந்திய நாட்டின் வரைபடத்தில் மிதிக்கிறார். மேலும் இந்த வீடியோ வெளியானதில் இருந்து நடிகர் அக்ஷய் குமாருக்கு எதிரான விமர்சனங்களும் ட்ரோல்களும் வலைதளத்தில் வந்து கொண்டே இருக்கிறது.
The Entertainers are all set to bring 100% shuddh desi entertainment to North America. Fasten your seat belts, we’re coming in March! 💥 @qatarairways pic.twitter.com/aoJaCECJce
— Akshay Kumar (@akshaykumar) February 5, 2023