வாணியம்பாடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எ.வ. வேலு, மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய மானியத்தை குறைத்து மாநில ஆட்சியாளர்களின் பெயரை கெடுக்க நினைக்கின்றது.  நம் பண்பாட்டின் அடையாளம் தான் மொழி. வட இந்தியர்கள் தமிழர்களைப் போல் வேட்டி சட்டை உடைகளை உடுத்துவது கிடையாது. நம்முடைய தமிழ் மொழியை அழிக்க படை எடுப்பு நடைபெறுகிறது. முன்மொழி கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்று கூறுகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மொழி இந்தி.

ஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்த மொழி தான் தமிழ். பிரதமர் மோடி தமிழ் பிடிக்கும் என்று கூறிவிட்டு ஐநாவில் தமிழ் படிக்கின்றார். முன்னொரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கு எதிராக போராடியவர்கள் தான் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் உள்ளிட்டோர். ஆனால் இங்கு இருக்கின்ற சில அரசியல்வாதிகள் என்ற ஏஜெண்டுகள் இந்தி கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு வரும் என்று கூறுகிறார்கள். பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் இந்தியை தாய் மொழியாக பயின்றவர்கள். அவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் வந்து கொத்தனார் வேலையும் பாணி பூரி மற்றும் பஞ்சுமிட்டாய் விற்கும் வேலையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்பு மொழியை படித்ததால் தான் வெளிநாட்டில் சென்று ஆங்கிலம் பேச முடிகின்றது. பொருளாதாரம் வளர்ச்சி அடைய முடிகின்றது என தெரிவித்துள்ளார்.