பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், பின் தங்கிய இளைஞர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக அலிப்பூர் சிறை அருங்காட்சியத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் காலம் காலமாக ஒன்றாக, ஒற்றுமையாக இருந்து
வருகின்றனர். இதுவே இந்தியாவின் பாரம்பரியமாக உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் “உஸ்தாத் அலி அக்பர் கான் மற்றும் பண்டிட் ரவிச்சங்கர் ஆகியோர் இசையில் புகழ் பெற்று விளங்குகின்றார்கள். அவர்களை நாம் வேறுபடுத்த முடியுமா?”, அவர்கள் மரபுவழியைக் கொண்டு மட்டுமே வேறுபடுத்த முடியும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் மும்தாஜ் பேகத்தின் நினைவாக கட்டப்பட்ட தாஜ்மகாலுக்கு எதிராக சில கருத்துக்கள் உள்ளனர். மேலும் அதன் பெயரை மாற்ற விரும்பும் மற்றொரு குழுவும் உள்ளது என்று அவர் கூறினார்.