
பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படம் 15 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், துல்கர் சல்மான், தீபிகா படுகோனே, திஷா பதானி போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது கல்கி படம் மீது ஒரு புதிய புகார் எழுந்துள்ளது.
அதாவது இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக சர்ச்சை காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கல்கிதாம் மடாதிபதியான ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் கல்கி அவதாரம் பற்றி புராணங்களில் வேறு விதமாக சொல்லப்பட்டிருப்பதாகவும் படத்தில் தவறான விதத்தில் சொல்லப்பட்டிருப்பதாகவும் கூறி நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.