
தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் ஆட்சி முடிவுக்கு வந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே சமயம் புதிய போட்டியாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி களத்தில் இறங்கியுள்ள நிலையில் தற்போது தமிழக அரசியல் களம் மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், ஆன்மீகம் தான் தமிழகத்தை காக்கப் போகின்றது. பாஜக தான் தமிழகத்தை ஆளப்போகின்றது. இந்த அக்காவும் தம்பி அண்ணாமலையும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம். அண்ணா வளர்த்தது தமிழ் கிடையாது, ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ் என்று அனைவருக்கும் தெரிய வேண்டும். பெரியார் வளர்த்தது தமிழ் இல்லை பெரியார்வாள் வளர்ந்தது தான் தமிழ் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.