
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான பெண் தனது கணவரை இழந்த நிலையில் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண் தன்னுடன் வேலை செய்யும் வாழைக்காய் தொழில் செய்து வரும் தொழிலாளியான ஒருவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தப் பெண் தனது மகளை பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் தனது பாட்டி வீட்டில் 10-வது படித்து வந்த அந்த சிறுமியை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
வளர்ப்பு தந்தையாக கருதப்படும் அந்த நபர் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் அந்த நபர் சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமி கர்ப்பமானதாக தெரிந்த நிலையில் கர்ப்பத்தை கலைக்க முயற்சியில் இறங்கியுள்ளார். சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
சிறுமி கற்பம் ஆனது வெளியே தெரிந்தால் தனக்கு அவமானம் ஏற்படும் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
இந்த விஷயம் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்தது “இந்த எண்ணத்தோடு தான இருந்துருக்காரு… என்று தாயின் புலம்பிய மனக்குமுறல் அனைவரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதனைதொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
2 மாதங்கள் தலைமறைவாக இருந்த அந்த நபர் மற்றும் சிறுமியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.