
மதுரையில் நேற்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. காவல் துறையும் செயலிழந்துவிட்டது. திமுக கட்சியின் அமைச்சர் செந்தில் பாலாஜி, அனிதா ராமகிருஷ்ணன், ஆர் எஸ் பாரதி போன்ற பலர் வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலகும் நிலை உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னது போன்று மக்களுக்கான பொற்கால ஆட்சி நடைபெறவில்லை திமுக குடும்பத்திற்கு பொற்கால ஆட்சி நடைபெறுகிறது.
அதன் பிறகு அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை குறித்த கேள்வி எழுப்பியபோது எம்ஜிஆருக்கும் பிரதமர் மோடிக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கிறது எம்ஜிஆரை யாருடனும் ஒப்பிட முடியாது என்று கூறினார். அதன்பிறகு அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க யார் ஒப்புக்கொண்டு வந்தாலும் கண்டிப்பாக அவர்களுடன் கூட்டணி வைப்போம் என்றார். இதே நிபந்தனைகளை சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஏற்றுக்கொண்டால் அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா நிருபர்கள் கேள்வி எழுப்பினார். மேலும் அது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார் என்றார்.