இ-ஷ்ரம்‌ என்ற திட்டத்தை தொழிலாளர் அமைச்சகம் கடந்த 2021- ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இந்த அட்டையை குறித்தும் மற்றும் விண்ணப்பிப்பது குறித்தும் தற்போது காணலாம்.

இந்தத் திட்டத்தில் முறைசாரா துறையில் வேலை பார்க்கும் எந்த ஒரு தொழிலாளரும் விண்ணப்பிக்கலாம். இ-ஷ்ரம்‌ கார்டு பெறுவதற்கு போர்டல் ஒன்று இருக்கிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இந்த போர்ட்டல் உதவும். இதன் மூலம் தொழிலாளர்கள் சுயமாக இ-ஷ்ரமுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

300 வணிகத் துறைகள் மற்றும் சுமார் 400 தொழிலாளர்களின் கீழ் இ-ஷ்ரம் போரட்டலில் பதிவு செய்யலாம். அமைப்புசாரா துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இ-ஷ்ரம்‌ கார்ட் அல்லது இ-ஸ்ரீமா கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளருக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும். குறிப்பாக 2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

அதோடு இதில் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு வசதியும் கிடைக்கும். மேலும் விபத்தில் தொழிலாளர்கள் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். விபத்தில் தொழிலாளர் ஊனமுற்றால் 1 லட்சம் நிதி உதவி கிடைக்கும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் வங்கிக் கணக்கு ஆகி ஆவணங்கள் தேவைப்படுகிறது.