
மத்திய மாநில அரசுகளானது பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதில் இ-ஷ்ரம் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கார்டு மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டு பணியாளர்கள் உட்பட பிற தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இரண்டு லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு கிடைக்கிறது.
இந்த கார்டை பெறுவதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர், வங்கி பாஸ்புக் போன்றவை முக்கிய ஆவணம். இந்த அட்டை பெற விருப்பமுள்ளவர்கள் eshram.gov.in எ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு செய்ய முடியாதவர்கள் பக்கத்தில் உள்ள இ சேவை மையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.