இன்றையகாலகட்டத்தில் பெண்கள் பொருளாதாரம் போன்ற விஷயங்களில் முன்பை விட  தற்போது எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனாலும், வரதட்சணைக் கொடுமை என்னும் கோரத்தின் தீவிரம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை. வரதட்சணை பிரச்சினையால் பல பெண்கள் தற்கொலை, கொலை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் இதற்கு மாறாக ராஜஸ்தானில் 1 ரூபாய் மற்றும் ஒரு தேங்காய் பெற்று வரதட்சணை வேண்டாம் எனக் கூறி நடைபெற்ற திருமணம்  வியக்க வைத்துள்ளது. சிகார் மாவட்டத்தை சேர்ந்த ஜெயா நாராயணன் என்பவர், வரதட்சணைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர். இவர்  வரதட்சணை வாங்காமல் பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை சில காலம் அவருடைய பெற்றோரிடம் கொடுக்கவும் கூறியுள்ளார்.