இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகளின் வீடியோக்களை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.  இந்நிலையில் நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய குரங்கின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு ஓடியது. அந்த குரங்கிடமிருந்து நாயை மீட்பதற்கு அப்பகுதி மக்கள் போராடியும் மின்னல் வேகத்தில் அந்த நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு குரங்கு ஓடிவிட்டது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.