தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சென்னை வந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் யார் யார் பங்கேற்பார்கள் என்று ரஜினிகாந்திடம் கேட்டபோது தனக்கு உறுதியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக செய்தியாளர் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதலமைச்சர் என்று கூறப்படுகிறது என கேள்வி கேட்க, டென்ஷனான ரஜினிகாந்த் என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.