
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சீமான் குறித்த பேச்சு தான் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சு குறித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரியார் யாருன்னு உங்களுக்கு தெரியாதா? அவர் யார் தமிழகத்திற்கு என்ன எல்லாம் செய்தார் என்று பெரியாரிஸ்டுகள் வந்து உங்களுக்கு சொல்லுவாங்க.
திராவிட மாடல் என்பது திருட்டு மாடலா? கட்டாயம் ஒரு நாள் நான் ஜெயிப்பேன். அன்னைக்கு உங்களையெல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்னு நீங்க சொன்னீங்க. இந்த ஜென்மத்துல நீங்க ஜெயிக்கவே மாட்டீங்க சீமான். என்னோட சாபம் உங்கள ஜெயிக்கவே விடாது. தொண்டவற்றவற்ற கத்தினால் ஜெயிச்சிடுவோம் என்று நீங்க நினைச்சிட்டீங்களா. அதெல்லாம் கனவுல கூட நடக்காது என்று விஜயலட்சுமி பேசியுள்ளார்.