சுங்கச்சாவடி பாஸ்: மாதம் ரூ.340-க்கு பயணம்!

தமிழகத்தில் உள்ள பலர் அறியாத ஒரு முக்கியமான தகவல், நம் மாநிலத்தின் 67 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் வெறும் ரூ.340-க்கு பாஸ் வழங்கப்படுகிறது என்பதுதான்!

இந்த சலுகை, சுங்கச்சாவடி அமைக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. உதாரணமாக, பரனூர் சுங்கச்சாவடியை எடுத்துக்கொண்டால், அதே பகுதியைச் சேர்ந்த வாகன பதிவெண் கொண்ட தனிநபர் வாகனங்கள் இதில் அடங்கும்.

இந்த திட்டத்தின் மூலம், தினமும் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், மாதம் ஒரு முறை மட்டும் கட்டணம் செலுத்தி வாகனத்தை இயக்கலாம். இது, குறிப்பாக தினமும் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் உள்ளூர் மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.