
பிரிட்டிஷ் இந்தி திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் தான் சந்தோஷ். இந்த படம் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வெளியானது. வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்த படம் கணவன் இறந்த பிறகு அவருக்கு பதில் காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணினுடைய கதையை தான் சொல்கிறது. பின்னர் அந்த பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.
இதுதான் படத்தின் கதை. இங்கிலாந்து சார்பாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் வெளியிட முடியாமல் சிக்கலில் மாட்டியிருக்கும் சந்தோஷ் திரைப்படத்தை அனுமதி இன்றி வெளியிடுவோம். இந்த படத்தை வெளியிடுவதற்காக ஜெயிலுக்கு போகவும் தயார்” என்று பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்