
இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் நோட்டல் ஏஜென்சியான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மூலமாக இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிக்கும் பெண்களுக்கு பிரகதி என்ற உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஐந்தாயிரம் மாணவர்களுக்கும் தமிழகத்தில் மட்டும் இன்ஜினியரிங் படிக்கும் 800 மாணவிகளுக்கும்,டிப்ளமோ படிக்கும் 700 மாணவர்களுக்கும் என மொத்தமாக 1500 மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் மாணவியின் வங்கி கணக்கிற்கு நேரடியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் வரை இந்த உதவி தொகையை பெறலாம். இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகளுக்கு பன்னெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் டிப்ளமோ படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த உதவி தொகை வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவி பெறும் தேர்ச்சி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். அரியர் வைத்தாள் மாணவிக்கு உதவி தொகை வழங்கப்படாது. இந்த உதவி தொகை விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து அதற்கான உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.