ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கும் பணத்தை கடைசி காலத்தில் சேர்த்து வைப்பதற்காக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி திட்டம் உங்களுடைய குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட முழு ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். பிரீமியம் செலுத்தும் காலத்தில் இருந்து முடிவு வரை இந்த திட்டம் வருடம் தோறும் காப்பீட்டு நன்மைகளை கொடுக்கிறது. அதோடு இது முடிவடையும் காலத்தில் அல்லது பாலிசிதாரர் பாலிசி காலத்திற்குள் இறந்து விட்டால் ஒரு மொத்த தொகையை கொடுக்கிறது.

காப்பீடு செய்தவரின் குடும்பத்திற்கு உதவ பணம் மற்றும் காப்பீடு உதவி ஆகிய இரண்டையுமே இந்த திட்டம் வழங்குவது தான் இதில் முக்கியமான நன்மையாகும். அவசர தேவைப்பட்டால் உறுதி செய்யப்பட்ட பலன்கள் நம்பகமான நிதி பாதுகாப்பை வழங்கும். நூறு வயது வரை வாழ்நாள் முழுவதும் அபாய காப்பீடு. 30 வயது வரை உறுதியான வருமானம் உண்டு. இதில் குறைந்தபட்சம் 90 நாட்கள் அதிகபட்சம் 55 வயது உடையவர்கள் இணையலாம். பாலிசி காலம் 100 ஆண்டுகள். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம்.