உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 35 மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் அப்டேட் ஆகாது என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சாம்சங் கேலக்ஸி நோட் 3, கேலக்ஸி எஸ் பிளஸ், கேலக்ஸி கோர், கேலக்ஸி எக்ஸ்பிரஸ் 2, கேலக்ஸி கிராண்ட், கேலக்ஸி நோட் 3, கேலக்ஸி எஸ்4 ஜூம், ஐபோன் 5, ஐபோன் 6, ஐபோன் எஸ் இ, iphone 6x, iphone 6s plus உள்ளிட்ட மாடல்களில் இனி வாட்ஸ் அப் அப்டேட் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.