
பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரு நாயை காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய உள்ள நிலையில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் ஒரு கால்வாயில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த நாயை மீட்பதற்காக வாலிபர் ஒருவர் தண்ணீரில் இறங்கினார். ஆனால் தண்ணீர் வேகமாக சென்ற நிலையில் அவரால் மேலே ஏறி வர முடியவில்லை. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக சுவரில் கால் வைத்து மனித சங்கிலியாக மாறினர்.
பின்னர் அவர்கள் நாயை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். இந்த வீடியோவை பப்டி என்ற பயனர் instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் ஒரு பயனர் இன்னும் உலகில் நல்ல மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். அதன் பிறகு மற்றொரு பயனர் உலகில் மனித சக்தியை விட பெரிய சக்தி எதுவும் இல்லை மனிதர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதே போன்று பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram