
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மைனே பியார் கியா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் . இவர் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் சல்மான் கான் பூஜா என்ற சிறுமிக்கு எலும்பு மஜ்ஜையை தானமாக கொடுத்ததால் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
அதாவது கடந்த 2010ல் பூஜா என்ற சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது எலும்பு மஜ்ஜை தேவைப்பட்டதால் சல்மான் கான் தன்னுடைய கால்பந்து குழுவினரிடம் நன்கொடை அளிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்த கால்பந்து குழுவினர் இறுதியில் ஏமாற்றி விட்டனர்.
அப்போது அந்த சிறுமியின் உயிரை காப்பாற்றுவதற்காக சல்மான் கானும், அவரது சகோதரரான ஹர்பாஸ் கானும் சேர்ந்து எலும்பு மஜ்ஜையை தானம் செய்தனர். இதனால் சல்மான்கான் “முதன் முதலில் எலும்பு மஜ்ஜை தானம் செய்த இந்திய சினிமா நடிகர்” என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.