தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் சிறுவனின் கல்வி தொடர உதவி செய்த சின்னத்திரை நடிகர் பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 15வது நார்வே திரைப்பட விழாவில் தனக்கு வழங்கப்பட்ட புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருதை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் வைத்து பாலா மரியாதை செலுத்தினார். அப்போது அங்கிருந்த பெண் தனது மகனின் கல்வி கட்டணத்தை செலுத்த உதவி கேட்ட நிலையில் பாலா உடனே உதவி கரம் நீட்டினார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.