சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை பிரபலமானவர்தான் நடிகர் மதுரை முத்து. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றார். இவருடைய காமெடிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடி ஜோக்கை சொல்லிவிட்டு அதனை சமாளிப்பதற்கு இவர் சொல்லக்கூடிய நகைச்சுவை தான் அல்டிமேட் ஆக இருக்கும். நகைச்சுவையில் கொடி கட்டி பறக்கும் கலைஞர்களில் ஒருவரான மதுரை முத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு பத்தாவது சீசனில் நடுவராக உள்ளார்.

இப்படியான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் எமோஷனலான ஒரு தருணம் நடந்துள்ளது. அதில் தன்னுடைய அம்மா மற்றும் மனைவிக்கு கோவில் கட்டுவதாக மதுரை முத்து கூறியுள்ளார். மதுரை முத்துவின் முதல் மனைவி கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தன் முதல் மனைவி லேகாவின் தோழியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தன்னுடைய முதல் மனைவி மற்றும் பெற்றோரை நினைவாகத்தான் மதுரை முத்து இந்த கோவிலை கட்டி வருகின்றார். அனைவரையும் கலங்க வைத்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Vijay TV Comedy பதிவைப் பகிர்ந்துள்ளார் (@vijaytv_comedyshow)