
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குராலா சர்ஜோஜனமா. இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரியர் நல அமைப்புகளுக்கு எழுதி வைத்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் எதுவும் இல்லாததால் தன்னுடைய இரண்டு கோடி மதிப்புள்ள வீட்டை அதற்கு அப்படியே கொடுத்துவிட்டார். அது மட்டுமல்லாமல் அனாதையாக இருப்பவர்களுக்கு இறுதி காரியங்களை நிர்வகிக்கும் வகையில் தர்ம மடம் ஒன்றை தொடங்கி அதற்கு 20 லட்சத்தை நன்கொடையாகவும் அவர் வழங்கியுள்ளார். இவரின் இந்த செயலை பாராட்டி பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.