
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். சமீப காலமாகவே கஷ்டப்படும் மக்களுக்கு ஓடோடி உதவி செய்யும் இவருடைய குணத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். முதலில் கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை தன்னுடைய சொந்த செலவில் வாங்கிக் கொடுத்த பாலா பிறகு கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து பண உதவியும் செய்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தனக்கு மகிழ்ச்சி இருப்பதாகவும் இதில் எந்த விளம்பரமும் தனக்கு தேவையில்லை என்றும் அவர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். இப்படி பல சேவைகளை தொடர்ந்து செய்து வரும் பாலா இதுவரை ஆறு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ள நிலையில் தற்போது விலங்குகளுக்காக ஏழாவதாக ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் பாலாவின் இந்த சேவைக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க