தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஈரோடு, சேலம், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. சேலம் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறியுள்ளது.